வளர்தமிழ் - TNPSC EXAM

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

வளர்தமிழ்


1.மனிதரைப் பிற உயிர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது?
இயல்
இசை
நாடகம்
மொழி

2.உலகில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை?
6000
6000+
3000
3000+

3."யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் 
இனிதாவது எங்கும் காணோம்" - என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியவர்?
பாரதியார்
பாரதிதாசன்
வாணிதாசன்
கண்ணதாசன்

4."என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பினளாம் எங்கள் தாய்" - என்று தமிழ்த்தாயின் தொன்மையை பாடியவர்?
வாணிதாசன்
கம்பர்
பாரதியார்
பாரதிதாசன்

5.தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல்?
அகத்தியம்
நன்னூல்
தொல்காப்பியம்
தண்டியலங்காரம்

6.தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் ------------ எழுத்துக்களாகவே அமைந்துள்ளன?
வலஞ்சுழி எழுத்துக்கள்
இடஞ்சுழி எழுத்துக்கள்
அ&ஆ
இவற்றில் எதுவுமில்லை

7.இவற்றுள் வலஞ்சுழி எழுத்துக்களில் சரியானவற்றைத் தேர்க?
ட, ய, ழ
அ, எ, ஔ, ண, ஞ
அ&ஆ
இவற்றில் எதுவுமில்லை

8.இவற்றுள் இடஞ்சுழி எழுத்துகளில் சரியானவற்றைத் தேர்க?
ட, ய, ழ
அ, எ, ஔ, ண, ஞ
அ&ஆ
இவற்றில் எதுவுமில்லை

9."தமிழென் கிளவியும் அதனோ ரற்றே" - தமிழ் என்ற சொல்லை குறிப்பிடும் நூல்? 
சிலப்பதிகாரம்
தொல்காப்பியம்
தண்டியலங்காரம்
தேவாரம்

10."இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை ஆயின்" - தமிழ்நாடு என்ற சொல்லை குறிப்பிடும் நூலான சிலப்பதிகாரத்தில் எந்த கண்டத்தில் அமைந்துள்ளது?
மதுரைக் காண்டம்
புகார்க் காண்டம்
வஞ்சிக் காண்டம்
இவற்றில் எதுவுமில்லை

11."தமிழன் கண்டாய்" - தமிழன் என்ற சொல்லை குறிப்பிடும் நூலான தேவாரத்தில் யார் பாடியது?
அப்பர் 
சுந்தரர்
சம்பந்தர்
இவற்றில் எதுவுமில்லை

12.உயர்திணை என்பதன் எதிர்சொல் அஃறிணை என்று பெயரிட்டனர் நம் முன்னோர். உயர்திணையின் எதிர்சொல் எப்படி அமைய வேண்டும்?
அஃறிணை
தாழ்திணை
உயர்வு அல்லாத திணை
தாழிணை

13.பாகற்காய் பிரித்து எழுதுக?
பாகற்+காய்
பாகல்+காய்
பாகு+அல்+காய்
பாக+ல்+காய்

14.பொருத்துக.
தொல்காப்பியம், நன்னூல் - சங்க இலக்கியம்
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு - இலக்கண நூல்கள்
திருக்குறள், நாலடியார் - காப்பிய நூல்கள்
சிலப்பதிகாரம், மணிமேகலை - அறநூல்கள்

A) 3 4 2 1
B) 3 2 1 4
C) 3 1 2 4
D) 2 1 4 3

15.பூ எத்தனை நிலைகளாக பிரிக்கப்படுகிறது?
6
7
8
9

16.பூவின் பாகங்களை சரியான வரிசையை தேர்க?
முகை, மொட்டு, அலர், வீ, செம்மல், மலர், அரும்பு
அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
மலர், அலர், செம்மல், முகை, மொட்டு, அரும்பு, வீ
செம்மல், வீ, அரும்பு, முகை, மலர், மொட்டு, அலர்

17.ஓரெழுத்து ஒருமொழி 'மா' என்ற சொல்லின் கீழ்க்கண்டவற்றுள் சரியானவற்றை தேர்க?
மரம், விலங்கு, பெரிய, திருமகள்
அழகு, அறிவு, அளவு, அழைத்தல்
துகள், மேன்மை, வயல், வண்டு
இவை அனைத்தும்

18.பொருத்துக.
இயல்தமிழ் - எண்ணத்தை வெளிப்படுத்தும்
இசைத்தமிழ் - உள்ளத்தை மகிழ்விக்கும்
நாடகத்தமிழ் - உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும்

A) 1 3 2
B) 3 2 1
C) 1 2 3 

19.தமிழ்க் கவிதை வடிவங்களில் தவறானவற்றை குறிப்பிடுக?
துளிப்பா
புதுக்கவிதை
ஹைக்கூ
செய்யுள்

20.உரைநடை வடிவங்களில் தவறானவற்றை குறிப்பிடுக?
கட்டுரை
கவிதை
சிறுகதை
புதினம்

21.தாவர இலைப் பெயரைப் பொருத்துக?
ஆல், அரசு, மா, பலா, வாழை - தாள்
அகத்தி, பசலை, முருங்கை - புல்
அருகு, கோரை - கீரை
நெல், வரகு - இலை

A) 1 2 3 4
B) 1 2 4 3
C) 4 3 2 1
D) 4 3 1 2

22.தாவர இலைப் பெயரைப் பொருத்துக?
மல்லி - தழை
சப்பாத்திக் கள்ளி, தாழை - மடல்
கரும்பு, நாணல் - தோகை
பனை, தென்னை - ஓலை
கமுகு - கூந்தல்

A) 4 5 3 2 1
B) 3 2 1 4 5
C) 1 2 3 5 4
D) 5 4 1 2 3
F) 1 2 3 4 5

23.மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது ------------------ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்?
எண்கள்
எழுத்துக்கள்
மொழிகள்
கருத்துகள்

24.வேளாண்மை என்ற சொல் இடம் பெற்ற நூல்கள்?
கலித்தொகை
திருக்குறள்
அ&ஆ
இவற்றில் எதுவுமில்லை

25.உழவர் என்ற சொல் இடம் பெற்ற நூல்?
திருக்குறள்
குறுந்தொகை
பதிற்றுப்பத்து
நற்றிணை

26.பாம்பு, முதலை, மீன், என்ற சொற்கள் இடம் பெற்ற நூல்?
பதிற்றுப்பத்து
குறுந்தொகை
நற்றிணை
அகநானூறு

27.வெள்ளம் என்ற சொல் இடம் பெற்ற நூல்?
நற்றினை
குறுந்தொகை
பதிற்றுப்பத்து
பரிபாடல்

28.கோடை என்ற சொல் இடம் பெற்ற நூல்?
அகநானூறு
தொல்காப்பியம்
சிலப்பதிகாரம்
குறுந்தொகை

29.உலகம் என்ற சொல் இடம் பெற்ற நூல்கள்?
அகநானூறு, திருக்குறள்
தொல்காப்பியம் (கிளவியாக்கம்), திருமுருகாற்றுப்படை
தொல்காப்பியம் (வினையியல்), திருமுருகாற்றுப்படை
பதிற்றுப்பத்து, திருக்குறள்

30.மருந்து என்ற சொல் இடம் பெற்ற நூல்கள்?
குறுந்தொகை பதிற்றுப்பத்து
நற்றிணை குறுந்தொகை
அகநானூறு திருக்குறள்
நற்றிணை குறுந்தொகை

31.ஊர் என்ற சொல் இடம் பெற்ற நூல்?
தொல்காப்பியம் கிளவியாக்கம்
தொல்காப்பியம் கற்பியல்
தொல்காப்பியம் அகத்திணையியல்
தொல்காப்பியம் வேற்றுமையியல்

32.அன்பு என்ற சொல் இடம் பெற்ற நூல்கள்?
தொல்காப்பியம் (கிளவியாக்கம்), திருக்குறள்
தொல்காப்பியம் (களவியல்), திருக்குறள்
தொல்காப்பியம் (வேற்றுமையியல்), திருக்குறள்
தொல்காப்பியம் (புறத்திணையியல்), திருக்குறள்

33.உயிர் என்ற சொல் இடம் பெற்ற நூல்கள்?
தொல்காப்பியம் (வேற்றுமையியல்), திருக்குறள்
தொல்காப்பியம் (புறத்திணையியல்), திருக்குறள்
தொல்காப்பியம் (கற்பியல்), திருக்குறள்
தொல்காப்பியம் (கிளவியாக்கம்), திருக்குறள்

34. மகிழ்ச்சி என்ற சொல் இடம் பெற்ற நூல்கள்?
தொல்காப்பியம் (கற்பியல்), திருக்குறள்
தொல்காப்பியம் (வேற்றுமையில்), திருக்குறள்
தொல்காப்பியம் (களவியல்), திருக்குறள்
தொல்காப்பியம் (கற்பியல்), திருக்குறள்

35.புகழ் என்ற சொல் இடம் பெற்ற நூல்?
தொல்காப்பியம் (களவியல்)
தொல்காப்பியம் (வேற்றுமையியல்)
தொல்காப்பியம் (கற்பியல்)
தொல்காப்பியம் (கிளவியாக்கம்)

36.அரசு என்ற சொல் இடம் பெற்ற நூல்?
புறநானூறு
அகநானூறு
நற்றிணை
திருக்குறள்

37.செய் என்ற சொல் இடம் பெற்ற நூல்?
திருக்குறள்
நற்றினை
குறுந்தொகை
பதிற்றுப்பத்து

38.செல் என்ற சொல் இடம் பெற்ற நூல்?
தொல்காப்பியம் (புறத்திணையியல்)
தொல்காப்பியம் (வேற்றுமையியல்)
தொல்காப்பியம் (களவியல்)
தொல்காப்பியம் (கிளவியாக்கம்)

39.பார் என்ற சொல் இடம் பெற்ற நூல்?
சிறுபாணாற்றுப்படை
கூத்தராற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
திருமுருகாற்றுப்படை

40.ஒழி என்ற சொல் இடம் பெற்ற நூல்?
தொல்காப்பியம் (வேற்றுமையில்)
தொல்காப்பியம் (கிளவியாக்கம்)
தொல்காப்பியம் (களவியல்)
தொல்காப்பியம் (கற்பியல்)

41.முடி என்ற சொல் இடம் பெற்ற நூல்?
தொல்காப்பியம் (கிளவியாக்கம்)
தொல்காப்பியம் (வேற்றுமையியல்)
தொல்காப்பியம் (வினையியல்)
தொல்காப்பியம் (களவியல்)

42.நீண்ட நீண்ட காலம்-நீ நீடு வாழ வேண்டும்! - என்ற பிறந்தநாள் வாழ்த்து பாடலை இயற்றியவர்?
கவிஞர் காசி ஆனந்தன்
கவிஞர் அறிவுமதி
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
மகாகவி பாரதியார்

43.'தொன்மை' என்ற சொல்லின் பொருள்?
புதுமை
பழமை
பெருமை
சீர்மை

44.'இடப்புறம்' என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்?
இடன்+புறம்
இட+புறம்
இடது+புறம்
இடப்புறம்+புறம்

45.'சீர்ளமை' என்ற சொல்லைப் பிரித்து பிரிக்கக் கிடைக்கும் சொல்?
சீர்மை+இளமை
சீர்+இளமை
சீரிய+இளமை
சீர்+இளமை

46.சிலம்பு+அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
சிலம்பதிகாரம்
சிலப்பதிகாரம்
சிலம்புதிகாரம்
சில பதிகாரம்

47.கணினி+தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
கணினிதமிழ்
கணினித்தமிழ்
கணிணிதமிழ்
கனினிதமிழ்

48. தமிழ் இலக்கியங்கள் இனிமையானவை இவற்றுள் பொருந்தாதது?
ஓசை இனிமை
சொல் இனிமை
பொருள் இனிமை
தமிழ் இனிமை

49. உலகில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இவற்றில் ஒரு சில மொழிகள் மட்டுமே -----------------, ----------------வடிவம் பெற்றுள்ளது அவற்றை குறிப்பிடுக?
பேச்சு வடிவம்
எழுத்து வடிவம்
அ&ஆ
இவற்றில் எதுவுமில்லை

50. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்த உதவுவது?
இலக்கியம்
மொழி
இலக்கணம்
இவற்றில் எதுவுமில்லை...

1 கருத்து:

திருக்குறள்

1. அமிழ்தமே ஆனாலும் ---------------- இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று. எனத் திருவள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறீர்? ...