1. "மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்" - என்னும் பாடல் இடம் பெற்ற நூல்?
கொன்றை வேந்தன்
ஆத்திசூடி
மூதுரை
புறநானூறு
2. "கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" - என்று பாடியவர்?
அதிவீரராம பாண்டியன்
ஔவையார்
உலகநாதன்
திருவள்ளுவர்
3. பொருத்துக.
மாசற - நாடு
சீர்தூக்கின் - ஒப்பிட்டு ஆராய்ந்து
தேசம் - குறை இல்லாமல்
A) 1 2 3
B) 3 2 1
C) 2 1 3
4. மூதுரை நூலின் ஆசிரியர்?
ஔவையார்
கபிலர்
உலகநாதன்
ஒக்கூர் மாசாத்தியார்
5. ஔவையார் நூல்களில் தவறானவற்றை குறிப்பிடுக?
ஆத்திச்சூடி
நல்வழி
உலக நீதி
கொன்றை வேந்தன்
6. மூதுரை என்னும் சொல்லுக்கு பொருள்?
ஆன்றோர் கூறும் அறிவுரை
சான்றோர் கூறும் அறிவுரை
இளையோர் கூறும் அறிவுரை
மூத்தோர் கூறும் அறிவுரை
7. மூதுரை பாடல்களின் எண்ணிக்கை?
30
31
40
41
8. மாணவர்கள் நூல்களை ------ கற்க வேண்டும்?
மேலோட்டமாக
மாசுற
மாசற
மயக்கமுற
9. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக் கிடைப்பது?
இடம்+எல்லாம்
இடம்+யெல்லாம்
இடம்+மெல்லாம்
இட+எல்லாம்
10. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
மாச+அற
மாசு+அற
மாச+உற
மாசு+உற
11. குற்றம்+இல்லாதவர் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
குற்றமில்லாதவர்
குற்றம்இல்லாதவர்
குற்றமல்லாதவர்
குற்றம்அல்லாதவர்
12. சிறப்பு+உடையார் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
சிறப்புஉடையார்
சிறப்படையார்
சிறப்புடையார்
சிறப்பிடையார்
நன்றி
பதிலளிநீக்கு