1. "நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாது எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு" - எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல்?
முதுமொழிக் காஞ்சி
ஆசாரக்கோவை
நித்திலக் கோவை
மதுரைக்காஞ்சி
2. "ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை நல்லினத் தாரோடு நட்டல்" - இப்பாடல் வரியை பாடியவர்?
திரிகூடராசப்பக் கவிராயர்
பெருவாயின் முள்ளியார்
ஔவையார்
மாங்குடி மருதனார்
3. பொருத்துக.
நன்றியறிதல் - பிறருக்கு உதவி செய்தல்
ஒப்புரவு - பிறர் செய்த உதவியை மறவாமை
நட்டல் - நட்பு கொள்ளுதல்
A) 3 1 2
B) 1 3 2
C) 2 1 3
4. 'ஆசாரக்கோவை' நூலின் ஆசிரியர்?
பெருவாயின் முள்ளியார்
பொய்கையார்
அம்மூவனார்
ஔவையார்
5. 'பெருவாயின் முள்ளியார்' பிறந்த ஊர்?
கயத்தாறு
கயத்தூர்
கடம்பூர்
கடலூர்
6. 'நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு' எனப் பொருள்படும் நூல்?
திருக்குறள்
ஏலாதி
ஆசாரக்கோவை
சிறுபஞ்சமூலம்
7. ஆசாரக்கோவை -------------------------- நூல்களுள் ஒன்று?
பதினெண் கீழ்க்கணக்கு
பதினெண்மேற்கணக்கு
சங்க நூல்கள்
இவற்றில் எதுவுமில்லை
8. ஆசாரக்கோவை ------------- வெண்பாக்களால் ஆனது?
104
98
110
100
9. பிறரிடம் நான் ------------ பேசுவேன்?
கடுஞ்சொல்
இன்சொல்
வன்சொல்
கொடுஞ்சொல்
10. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது ------------- ஆகும்?
வம்பு
அமைதி
அடக்கம்
பொறை
11. அறிவு+உடமை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
அறிவுடைமை
அறிவுஉடமை
அறிஉடமை
அறியுடமை
12.இவை+எட்டும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
இவைஎட்டும்
இவ்வெட்டும்
இவையெட்டும்
இவ்எட்டும்
13. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
நன்றி+அறிதல்
நன்று+அறிதல்
நன்று+யறிதல்
நன்றி+யறிதல்
14. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
பொறுமை+உடமை
பொறை+யுடமை
பொறு+உடமை
பொறை+உடமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக