1. அமிழ்தமே ஆனாலும் ---------------- இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று. எனத் திருவள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறீர்?
விருந்தினர்
நண்பர்கள்
உறவினர்கள்
பக்கத்து வீட்டார்
2. மோந்து பார்த்தால் ---------------- மலர் வாடிடும்?
குவளை
அனிச்சம்
செங்காந்தள்
தாமரை
3. திருவள்ளுவர் அனிச்சம் மலரை யாருடன் ஒப்பிடுகிறார்?
உறவினர்
நண்பர்கள்
விருந்தினர்
இவற்றில் எதுவுமில்லை
4. அடுத்தவர் பொருளைக் களவாடலாம் என ------------ ஆல் நினைப்பது கூட தீமை என்கிறார் வள்ளுவர்?
கருணை
உடல்
பாசம்
உள்ளம்
5. களவு மூலம் சேர்க்கப்படும் செல்வம் வளர்வது போலத் தோன்றினாலும் முடிவில் அழிந்துவிடும் என்று கூறியவர்?
திருவள்ளுவர்
ஔவையார்
கம்பர்
வள்ளலார்
6. எது நிலையான செல்வம் என்று திருவள்ளுவர் கூறுகிறார்?
அடக்கம்
ஊக்கம்
நெருக்கம்
இறக்கம்
7. எண்ணுவதை உயர்வாக எண்ண வேண்டும். எண்ணியதை அடையாவிட்டாலும் ------------ மன நிறைவைத் தரும்?
எண்ணம்
பண்பு
அறம்
ஒழுக்கம்
8. விருந்தினர் முகம் எப்போது வாடும்?
நம் வீடு மாறினால்
நம் முகவரி மாறினால்
நம் முகம் மாறினால்
நாம் நன்கு வரவேற்றால்
9. ஆராயும் அறிவு உடையவர்கள் --------சொற்களைப் பேசமாட்டார்?
உயர்வான
பயன்தராத
பயனுடைய
விலையற்ற
10. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?
பொருளு+டைமை
பொரு+ளுடைமை
பொருள்+உடைமை
பொருள்+ளுடைமை
11.உள்ளுவது+எல்லாம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
உள்ளுவதெல்லாம்
உள்ளுவதுதெல்லாம்
உள்ளுவத்தெல்லாம்
உள்ளுவதுஎல்லாம்
12.பயன்+இலா என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
பயனிலா
பயன்னில்லா
பயன்இலா
பயன்இல்லா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக