தமிழ் எழுத்துகளின் வகை தொகை - TNPSC EXAM

திங்கள், 10 செப்டம்பர், 2018

தமிழ் எழுத்துகளின் வகை தொகை


1.தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை?
4
5
6
2

2.ஒலி வடிவாக எழுதப்படுவதும் வரிவடிவாக எழுதப்படுவதும் ----------- எனப்படும்?
எழுத்து
சொல்
பொருள்
யாப்பு

3.பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் எவ்வாறு பிறக்கின்றன?
வாயைத் திறத்தல்
உதடுகளை விரித்தல்
உதடுகளைக் குவித்தல்
இம்மூன்றும்

4.உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டில் குறில் மற்றும் நெடில் எழுத்துக்கள் எத்தனை?
12, 0
5, 7
7, 5
0, 12

5.மாத்திரை என்பதன் பொருள்?
மருந்து
ஒலி அளவு
கால அளவு
இவற்றில் எதுவுமில்லை

6.குறில் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு?
4 மாத்திரை
3 மாத்திரை
2 மாத்திரை
1 மாத்திரை

7.நெடில் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு?
1 மாத்திரை
2 மாத்திரை
3 மாத்திரை
4 மாத்திரை

8.மெய் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு?
அரை மாத்திரை
இரண்டு மாத்திரை
கால் மாத்திரை
ஒரு மாத்திரை

9.ஆயுத எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு?
கால் மாத்திரை
அரை மாத்திரை
ஒரு மாத்திரை
ஒன்றரை மாத்திரை

10.மெய் என்பதன் பொருள்?
மிடறு
உரம்
உடம்பு
உயிர்

11.மெய் எழுத்துக்கள் பன்னிரண்டும் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
வல்லினம் மட்டும்
மெல்லினம் மட்டும்
இடையினம் மட்டும்
இம்மூன்றும்

12.பொருத்துக.
வல்லினம் - ங், ஞ, ண், ந், ம், ன்
மெல்லினம் - ய், ர், ல், வ், ழ், ள்
இடையினம் - க், ச், ட், த், ப், ற்

A) 3 1 2
B) 1 2 3
C) 3 2 1

13.'கபிலர்' என்னும் சொல்லின்  மாத்திரை அளவு?
3 மாத்திரை
3 1/2 மாத்திரை
4 மாத்திரை
4 1/2 மாத்திரை

14.உயிர்மெய் எழுத்துகளையும்--------------,----------------- என இரு வகைப்படுத்தலாம். அவற்றை தேர்க?
உயிர்மெய்க் குறில்
உயிர்மெய் நெடில்
அ&ஆ
இவற்றில் எதுவுமில்லை

15.பழமொழியின் சிறப்பு ---------------------- சொல்வது?
விரிவாகச்
சுருங்கச்
பழமையைச்
பல மொழிகளில்

16.நோயற்ற வாழ்வைத் தருவது ------------?
சுத்தம்
சுகாதாரம்
அசுத்தம்
ஆரோக்கியம்

17.உடல் ஆரோக்கியமே --------------- அடிப்படை?
ஊதியத்திற்கு
ஆரோக்கியத்திற்கு
உழைப்புக்கு
நல்வாழ்வுக்கு

18.பொருத்துக. 
வலஞ்சுழி - Anti Clock Wise
இடஞ்சுழி - Clock Wise
இணையம் - internet

A) 1 2 3
B) 2 1 3
C) 3 2 1

19.பொருத்துக.
Search Engine - குரல்தேடல்
Voice Search - தேடுபொறி
Touch Screen - தொடுதிரை

A) 2 1 3
B) 3 2 1
C) 1 2 3

1 கருத்து:

திருக்குறள்

1. அமிழ்தமே ஆனாலும் ---------------- இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று. எனத் திருவள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறீர்? ...